கருக்கலைப்பு சட்டமசோதா முகநூல்
உலகம்

கருக்கலைப்பு சட்டமசோதாவை நிறைவேற்றியது பிரான்ஸ்!

பிரான்ஸில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

PT WEB

பிரான்ஸில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாக பதிவு செய்த முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்ற மேலவையில் நடைபெற்ற சிறப்பு அமர்வில் இதற்கு ஆதரவாக 780 உறுப்பினர்களும் எதிராக 72 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனையடுத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களுக்கு பாரம்பரிய முறைப்படி சீலிங்க் செரிமனி விழா அந்த நாட்டில் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இதற்கும் வரும் மகளிர் தினத்தன்று சீலிங் செரிமனி நடைபெறும் என அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஈஃபிள் டவர் முன் திரண்டு மகளிர் அமைப்பினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.