உலகம்

வீடியோ கேம் போட்டியில் 20 கோடி பரிசு பெற்ற 16 வயது சிறுவன் 

வீடியோ கேம் போட்டியில் 20 கோடி பரிசு பெற்ற 16 வயது சிறுவன் 

webteam

ஆன்லைன் வீடியோ கேம் போட்டியில் 16 வயது சிறுவன் ஒருவன் வெற்றிப் பெற்று 3 மில்லியன் டாலரை பரிசாக பெற்றுள்ளார். 

அமெரிக்காவின் பெனிசில்வேனியா பகுதியை சேர்ந்தவர் 16வயது சிறுவன் ஜியர்ஸ்டோர்ஃப் (Giersdorf). இவர் அமெரிக்காவில் நடைபெற்ற ‘ஃபார்ட்நைட்’ என்ற ஆன்லைன் வீடியோ கேம் போட்டியில் பங்கேற்றார். இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்தப்போட்டியில் தொடக்கம் முதலே ஜியர்ஸ்டோர்ஃப் சிறப்பாக விளையாடினார். இந்தப் போட்டியில் அனைத்து சுற்றுகளின் முடிவில் 59 புள்ளிகள் பெற்று இவர் முதலிடத்தை பிடித்தார். 

இவர் இரண்டாவதாக வந்த சீனாவை சேர்ந்த சங்கைவிட அதிகமான புள்ளிகள் பெற்றார். இதனையடுத்து இப்போட்டியில் முதல் பரிசான 3 மில்லியன் டாலரை பரிசாக ஜியர்ஸ்டோர்ஃப் தட்டிச் சென்றார். இந்திய மதிப்பில் இதன் தொகை 20 கோடியே 68 லட்சம் ரூபாய் ஆகும். ஒரு ஆன்லைன் விளையாட்டு போட்டியில் வெற்றிப் பெற்றவருக்கு இத்தகைய பெரிய தொகை பரிசாக கிடைத்தது இதுவே முதல் முறை என்பதால் இவர் உலகளவில் தற்போது பிரபலமாகியுள்ளார். 

இந்தப் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த சீன வீரர் 1.8 மில்லியன் டாலரை பரிசாக பெற்றார். மேலும் இப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் 50ஆயிரம் டாலர் வழங்கப்பட்டது. உலகளவில் அதிகமாக பணம் செலவிடப்பட்ட ஆன்லைன் கேமிங் போட்டி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.