மெக்சிகோவில் கார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை போர்டு நிறுவனம் ரத்து செய்துள்ளது.
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் கார்களுக்கு அதிக வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து ஃபோர்டு நிர்வாகம் இம்முடிவை எடுத்திருக்கிறது. ஃபோர்டு நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம். கார் உற்பத்தியில் உலக சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றுள்ள ஃபோர்டு. டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பை தொடர்ந்து மெக்சிகோவில் கார் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்துள்ளது. தங்கள் கார்களை அமெரிக்காவில் விற்பனை செய்ய அதிக வரியை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் தொழிற்சாலைத் திட்டத்தை ரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளது போர்டு.
கார் தொழிற்சாலைக்காக மெக்சிகோ அரசு தரப்பில் வழங்கப்பட்ட நிதி அனைத்தும் திருப்பி அளிக்கப்படும் என்றும் போர்டு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கார் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதால், மெக்சிகோ அதிர்ச்சியடைந்திருக்கிறது. முன்னதாக, மெக்சிகோவில் தயாராகும் கார்களுக்கு அதிக வரி விதிக்கப்போவதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தைச் சுட்டிக்காட்டி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.