அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெய்து வரும் கனமழை காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாத கால அளவுக்கு பெய்ய வேண்டிய கனமழை, சுமார் மூன்று மணி நேரத்தில் கொட்டித் தீர்த்ததால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
புரூக்ளின் பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுரங்க நடைபாதைகளில் வெள்ளநீர் புகுந்திருப்பதால் மக்களின் இயல்பு நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.