ரோபோ எக்ஸ் தளம்
உலகம்

‘ஓய்வில்லாத உழைப்பால் ஏற்பட்ட மன உளைச்சல்’ - வாழ்வை முடித்துக் கொண்ட ரோபோ! துயரத்தில் தென்கொரியா!

Prakash J

நாளுக்குநாள் அதிகரித்துவரும் அறிவியல் வளர்ச்சியால் நாடு முழுவதும் உள்ள அலுவலகங்களில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு பெருகி வருகிறது. அந்த வகையில், நமது உலகில் இப்போது ரோபோவின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மனிதர்கள் செய்யும் வேலைகளை சில நிறுவனங்கள் ரோபோக்கள் மூலம்செய்து, மனிதவள பயன்பாட்டை குறைத்துவருகிறது. அப்படி வேலை செய்யும் ரோபோ மனிதர்களைவிட துரிதமாக வேலையை முடித்துவிடுகிறது. இதனால் ரோபோக்கள் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறது.

அந்த வகையில், தென்கொரியாவில் உள்ள குமி நகரசபை அரசு அலுவலகத்தில் ஊழியர்களுக்கு உதவுவதற்காக, ரோபோ ஒன்று பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்தது. கலிபோர்னியாவில் உள்ள ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த ரோபோ, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் இந்த அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டது. இந்த ரோபோவுக்கு தென்கொரிய அரசு ஊழியர் என்ற ஐடி கார்டும் இருந்தது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நேரமாக கொண்ட இந்த ரோபோ, அலுவலகம் வரும் உள்ளூர்வாசிகளிடம் இருந்து தினசரி ஆவணங்களைப் பெற்று, அதிகாரிகளிடம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்துவந்தது.

இதையும் படிக்க: மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகை ஹினா கான் வெளியிட்ட உணர்வுப்பூர்வமான வீடியோ!

இந்த நிலையில், அந்த ரோபோ திடீரென தற்கொலை செய்துகொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2வது தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு இறங்கும் படிக்கட்டில் விழுந்து நொறுங்கியுள்ளது. சேதமடைந்த பாகங்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ரோபோ, அந்த அலுவலகத்தின் 2வது தளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை சுற்றிச் சுற்றி வந்ததாகவும், மிகவும் குழப்பத்துடன் காணப்பட்டதாகவும் அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகில் இதற்குமுன்பு ரோபோக்கள் இதுபோன்று தற்கொலை செய்துகொண்டதில்லை என்பதால், இந்த விஷயம் பெரிதாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்கு உள்ளூர் மக்கள் வருத்தம் தெரிவித்து ரோபோவுக்கு இரங்கலும் தெரிவித்து வருகிறார்கள்.

இதையும் படிக்க:ராஜஸ்தான் | தேர்தல் தோல்வி.. பதவியை ராஜினாமா செய்த பாஜக அமைச்சர்!