உலகம்

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பொறுப்பேற்கும் முதல் கறுப்பினப் பெண்

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பொறுப்பேற்கும் முதல் கறுப்பினப் பெண்

webteam

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் முதல் கறுப்பினப் பெண் நீதிபதியாக கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் பதவியேற்கவுள்ளார்.

அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் முதன்முறையாக கறுப்பின பெண் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார். அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்பவரை புதிய நீதிபதியாக நியமிக்க, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார். அவருடைய இந்த ஒப்புதலுக்கு பின்னர் அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தி அதன்பின் தான் அவர் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். இந்நிலையில், அவரை நீதிபதியாக நியமிக்க இன்று வாக்கெடுப்பு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜாக்சனை நீதிபதியாக நியமிக்க தொடக்கத்திலிருந்தே ஜனநாயகக் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பைடன் தனது தேர்தல் வாக்குறுதியின் போது, கறுப்பின ஆப்ரிக்க அமெரிக்கரை நீதிபதியாக நியமிக்கலாம் என்று கூறியதை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். 94 சதவீதம் வெள்ளை அமெரிக்கர்களுக்கு மத்தியில், 6 சதவீதம் மட்டுமே இருக்கும் கறுப்பின ஆப்ரிக்கரை நீதிபதியாக நியமிப்பதா என்று அவர்கள் விமர்சித்தனர். இதனால் அவர்களுடைய வாக்கு ஜாக்சனுக்கு எதிராகவே இருக்கும்.

மீதமிருக்கும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து, அவருக்கு ஆதரவாக வாக்களித்தால், துணை அதிபர் கமலா ஹாரிசின் வாக்கையும் சேர்த்து கணக்கில் கொண்டால், அப்போது ஜாக்சன் நீதிபதியாக செனட் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார். தற்போது 51 வயதாகும் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன், ஓய்வு பெறப்போகும் 83 வயது நீதிபதி ஸ்டீபன் பிரேயர் என்பவருக்கு பதிலாக பொறுப்பேற்பார்.

ஜாக்சன் வாக்கெடுப்பில் வெல்லும்பட்சத்தில் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றும் மூன்றாவது ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஆவார். ஆனால் முதல் கறுப்பினப் பெண் நீதிபதி ஆவார். ஏற்கனவே பதவி வகித்த இருவரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.