இங்கிலாந்து அரச பரம்பரையினரின் பாதுகாப்பு மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக நியமிக்கப்படும் அதிகாரிகளில் முதல்முறையாக கறுப்பினத்தை சேர்ந்த
ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அரச பரம்பரையினரின் தேவைகளை பூர்த்தி செய்யவும், பாதுகாப்பிற்காகவும், அரண்மனை அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். இங்கிலாந்து அரச
வரலாற்றில் இதுவரை இந்த பதவிக்கு வெள்ளையர்கள் மட்டும் நியமிக்கப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக முன்னாள் விமானப்படை அதிகாரியான நானா கோஃபி
என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கானா நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். ஆப்ரிக்கா, ஆசியா உள்ளிட்ட பல கண்டங்களைச் சேர்ந்த நாடுகளை காலனிகளாக வைத்திருந்த
இங்கிலாந்து ராஜ பரம்பரையினர் பிற இனத்தவர்களை அரண்மனையின் ராஜ விசுவாசிகளாகவும், அதிகாரிகளும் நியமிப்பதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் இந்த
மரபை தகர்த்து முதல்முறையாக கறுப்பின அதிகாரி இங்கிலாந்து அரண்மனையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.