உலகம்

ஹெச்-1பி விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம்?

ஹெச்-1பி விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம்?

webteam

ஹெச்-1பி விசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தம்பதிகளில் ஒருவர் ஹெச்-1பி விசா வைத்திருந்தால், அவரது கணவர் அல்லது மனைவிக்கு ஹெச்-4 வழங்கப்பட்டு, அவர்கள் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக பணியாற்ற முடியும் என்ற நிலை இருந்தது. ஒபாமா ஆட்சி காலத்தில் சிறப்பு சட்டம் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த நடைமுறையால், இந்தியர்கள் அதிகளவில் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். அதற்கு முன்பு வரை, ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள், அமெரிக்காவில் நிரந்தர வசிப்பிடம் பெறாதவரை அவரது கணவரோ அல்லது மனைவியோ அங்கு பணியாற்ற முடியாது. 

நிரந்தர வசிப்பிடம் பெறுவதற்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகும் என்பதால் இந்த விதிமுறையை ஒபாமா மாற்றி அமைத்தார். ஆனால் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்காக ஹெச்-4 விசாவுக்கான அனுமதியை ரத்து செய்ய ட்ரம்ப் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் அமெரிக்காவில் பணியாற்றும் 70 ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் ஹெச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.