அமெரிக்க முன்னாள் அதிபர்  முகநூல்
உலகம்

டிரம்ப்பை சுட்டது யார்? - வெளியான தகவல்கள்

ஜெனிட்டா ரோஸ்லின்

வரும் நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் பரப்புரையில் இன்று ஈடுபட்டிருந்தார் டொனால்டு டிரம்ப்.

ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது வலது காதின் மேல் துப்பாக்கியின் குண்டுகள் உரசிச்சென்றன. உடனடியாக தனது காதை பிடித்துக்கொண்டு டிரம்ப் கீழே அமர்ந்துவிட்டார்.

உடனடியாக, அங்கிருந்த சிறப்பு பாதுகாப்புப் படையினர் டிரம்ப்பை அங்கிருந்து எழுப்பினர். அப்போது, டிரம்பின் வலது காதில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் அவரை காரில் ஏற்றி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன.மேலும், பேரணியில் பங்கேற்ற ஆதரவாளர் ஒருவர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. 

இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பெயரை fbi வெளியிட்டுள்ளது.

அதன்படி துப்பாக்கி சூடு நடத்தியவர், பென்சில்வேனியாவை சேர்ந்த தாமஸ் மேத்யூ குரூஸ் என்ற 20 வயது இளைஞர் என்று தெரியவந்துள்ளது. 20 வயது இளைஞரொருவர், அமெரிக்க முன்னாள் அதிபரை துப்பாக்கியில் சுட்டு கொலை செய்ய திட்டமிட்டது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.