உலகம்

போலி கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்

போலி கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்

jagadeesh

நடப்பு ஆண்டில் மட்டும் ஃபேஸ்புக் சுமார் 50 லட்சத்து 40 ஆயிரம் போலி கணக்குகளை நீக்கியுள்ளது. 

அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று இந்த நடவடிக்கையை ஃபேஸ்புக் மேற்கொண்டுள்ளது. இதில் 50 ஆயிரத்து 741 புகார்கள் அமெரிக்காவிடமிருந்து வந்ததாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

மேலும், தவறான தகவல்களையும், வெறுப்பை பரப்பும் விதமாகவும் பதிவு வெளியிட்ட 50 லட்சத்து 40 ஆயிரம் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. யார் இந்த போலி கணக்குகளை உருவாக்கினர், எதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.