மார்க் ஜூக்கர்பர்க், அம்பானி, அதானி எக்ஸ் தளம்
உலகம்

பில்லினியர் பட்டியல்|2வது இடத்துக்கு முன்னேறிய மார்க் ஜூக்கர்பர்க்.. அம்பானி, அதானிக்கு எத்தகையஇடம்?

Prakash J

முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனரும், மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கபர்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 206.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (17,31,128.21 கோடி) உயர்ந்துள்ளது. இதற்கு மெட்டா நிறுவனத்தில் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருவதுதான் காரணம். மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவான மெட்டாவெர்ஸ் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கைவைக்கத் தொடங்கி இருப்பதே இந்த நிறுவன பங்குகளின் மதிப்பு அதிகரிப்பதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, மார்க் ஜூக்கர்பர்க்கின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டு வருகின்றன. முதலில் சரிவதுபோல இருந்த மார்க்கின் பங்குகள், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 206.2 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்துள்ளன. அவர் தற்போது 2-வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ்ஸைவிட 1.1 பில்லியன் டாலர்கள் அதிகமாக உள்ளார். இருப்பினும் முதலிடத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உள்ளார். அவர் மார்க் ஜூக்கர்பர்க்கைவிட, 50 பில்லியன் டாலர்கள் அதிகமாக வைத்துள்ளார். இதில், இரண்டாம் காலாண்டில் மெட்டாவின் பங்குகள் அதிகளவில் உயர்ந்தன. குறிப்பிடத்தக்க அம்சமாக 23 சதவீதம் உயர்ந்துள்ளன.

இதையும் படிக்க: உபியில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆசிரியர் குடும்பம்.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவமா? யோகி அரசு விசாரணை!

மார்க்கின் பவர் ஏஐ சாட்பாக்ஸ் அவருக்கு அதிகளவிலான உயர்வுக்கு வழிவகுத்துள்ளன. மெட்டாவின் ஒரு பங்குகள் நேற்று, 582.77 டாலர்களில் நிறைவடைந்தன. நடப்பு ஆண்டில் மட்டும் மார்க்கின் சொத்து மதிப்பு 78 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலான சொத்து மதிப்பு மெட்டா நிறுவனத்தில் அவருக்கு இருக்கும் பங்குகளின் மூலமாக மட்டுமே வந்துள்ளது. மெட்டா நிறுவனத்தில் மார்க் 13 சதவீத பங்குகளை வைத்துள்ளார். அதாவது 345 மில்லியன் பங்குகள் அவருக்குச் சொந்தமானதாக இருக்கின்றன. இந்த வளர்ச்சியானது புளூம்பெர்க் நிறுவனத்தில் ஆராயப்பட்ட 500 உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதிகளவிலான வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானி, அதானி

உலகப் பணக்காரர்கள் (முதல் 10 இடங்களில்..)

1. எலான் மஸ்க் -256 பில்லியன் டாலர்

2. மார்க் ஜூக்கர்பெர்க் -206 பில்லியன் டாலர்

3. ஜெஃப் பெசோஸ் -205 பில்லியன் டாலர்

4. பெர்னார்ட் அர்னால்ட் -193 பில்லியன் டாலர்

5. லாரி எலிசன் -179 பில்லியன் டாலர்

6. பில் கேட்ஸ் -161 பில்லியன் டாலர்

7. லாரி பேஜ் -150 பில்லியன் டாலர்

8. ஸ்டீவ் பால்மர் -145 பில்லியன் டாலர்

9. வாரன் பஃபெட் -143 பில்லியன் டாலர்

10. செர்ஜி பிரின் -141 பில்லியன் டாலர்

இந்தப் பட்டியலில் இந்திய பணக்காரர்களான முகேஷ் அம்பானி 107 பில்லியன் டாலர் மதிப்புடன் 14வது இடத்திலும், கெளதம் அதானி 100 பில்லியன் டாலர் மதிப்புடன் 17வது இடத்தில் உள்ளனர்.

இதையும் படிக்க: தலைமைச் செயலகத்தின் 3-வது மாடியில் இருந்த குதித்த துணை சபாநாயகர்.. மகாராஷ்டிராவில் பரபரப்பு!