உலகம்

உக்ரைனில் செய்தி ஒளிப்பரப்பின்போது வெடித்த வெடிகுண்டுகள் - வைரலாகும் வீடியோ

உக்ரைனில் செய்தி ஒளிப்பரப்பின்போது வெடித்த வெடிகுண்டுகள் - வைரலாகும் வீடியோ

சங்கீதா

உக்ரைனில் செய்தி ஒளிப்பரப்பு செய்துகொண்டிருக்கும்போது, கட்டடத்துக்கு பின்னால் வெடிகுண்டு வெடித்து ஒளிர்ந்த வெளிச்சத்தால், செய்தி பதிவுசெய்யப்படுவது பாதியில் நிறுத்தப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதை எதிர்த்து, கடந்த 24-ம் தேதி முதல் அந்நாட்டின் மீது, அதன் அண்டை நாடான ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் கிழக்குப் பதிகுகளில் இந்தத் தாக்குதல் சம்பவங்கள் கடந்த 8 நாட்களாக விடைவிடாமல் நடைபெற்று வருகிறது. இதையடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. உலக நாடுகள் பலவும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.

மூன்றாம் உலகப்போருக்கு வித்திட்டுள்ளது என என்னும் வகையில், ராணுவத் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இந்தத் தாக்குதலில் இரு நாடுகளின் பக்கமும் ஏராளமான உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக உக்ரைனின் தலைநகர் கீவ், கெர்சன், கார்கிவ் ஆகிய நகரங்களில் ரஷ்யா உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், கெர்சன் நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதையடுத்து உக்ரைனின் மூன்றாவது பெரிய நகரமான ஒடெசா நகரை நோக்கி, ரஷ்ய படைகள் தாக்குதல்களை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில், செய்தியாளர் ஒருவர் தனது நிறுவனத்திலிருந்து செய்திகள் குறித்த வீடியோவை பதிவு செய்துகொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் சிறிது தூரத்தில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றது, அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இரண்டு வெடிகுண்டுகள் வெடித்து ஒளிர்ந்த வெளிச்சம் கண்களை கூசும் வகையில் பார்ப்பவர்கள் பதறவைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த செய்தியாளர், உடனடியாக செய்தியை பதிவுசெய்வதை நிறுத்திவிட்டு சென்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.