உலகம்

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பாதுகாப்பானதே! - ஐரோப்பிய நிறுவனம்

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பாதுகாப்பானதே! - ஐரோப்பிய நிறுவனம்

Sinekadhara

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பாதுகாப்பானதுதான் என ஐரோப்பிய மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவுக்கு ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபோது தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல் போன்ற பிரச்னைகள் பக்கவிளைவாக ஏற்படுவதாகக் கூறி பல ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் இந்த தடுப்பூசி பாதுகாப்பானதுதானா மற்றும் நம்பகத்தன்மை எத்தகையது என்பதுபோன்ற கேள்விகளைப் பலரும் முன்வைத்து வந்தனர்.

ஐரோப்பிய மருந்து நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியால் ரத்த உறைதல் என்பது மிகவும் அரிதானதாகவே உள்ளது எனவும், இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானதுதான் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.