உலகம்

சுற்றுச்சூழல் செயல்திறனில் மோசமான நிலை - கடைசி இடம் பிடித்த இந்தியா!

சுற்றுச்சூழல் செயல்திறனில் மோசமான நிலை - கடைசி இடம் பிடித்த இந்தியா!

ச. முத்துகிருஷ்ணன்

உலக அளவிலான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் இந்தியா மிகவும் மோசமான நிலையில், கடைசி இடத்தை பிடித்துள்ளது. கொலம்பியா மற்றும் யேல் (YALE) பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் 11 பிரச்னைகளை முன்வைத்து 40 குறியீடுகளின் அடிப்படையில் தரவரிசை தயாரிக்கப்பட்டது.

இதில், 77 புள்ளி 9 மதிப்பெண்கள் பெற்று டென்மார்க் முதலிடத்தை பிடித்தது. அமெரிக்கா பட்டியலில் 43 வது இடத்தில் உள்ளது. பட்டியிலில் இந்தியா 18 புள்ளி 9 மதிப்பெண்கள் பெற்று 180-வது இடத்தில் அதாவது கடைசி இடத்தில் உள்ளது. மோசமான காற்று மாசு, விரைவாக அதிகரிக்கும் பசுமை இல்ல வாயு போன்ற காரணத்தால், சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது.

இந்தியாவுடன் சேர்த்து சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளும் பட்டியலில் மிகவும் மோசமான இடத்தில் உள்ளன. சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளில் தற்போதைய போக்குகள் இருந்தால், 2050 இல் 50% க்கும் அதிகமான உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வை அந்நாடுகள் கொண்டிருக்கும என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.