உலகம்

டிவியை இயக்க ரிமோட் தேவையில்லை காபி கப் போதும்!

டிவியை இயக்க ரிமோட் தேவையில்லை காபி கப் போதும்!

webteam

ரிமோட் கன்ட்ரோல் இல்லாமல் உடல் அசைவுகள் மூலம் தொலைக்காட்சி, கணினி மற்றும் ஐபேடுகளை இயங்க வைக்கும் புதிய தொழில்நுட்பத்தை பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் நாம் அருந்தும் காபி கோப்பையை கொண்டே தொலைக்காட்சியில் வேறு சேனல்களை எளிதாக மாற்ற மு‌டியும். ஒளி, ஒலி அளவுகள் உள்ளிட்ட மாற்றங்களையும் கண் அசைவை வைத்தே எளிதாக மேற்கொள்ள முடியும். அது தவிர கைகளில‌ இருக்கும் பொருட்களை நகர்த்தி கணினியிலும் பணியாற்ற முடியும்.

தொலைக்காட்சி, கணினி மற்றும் ஐபேடுகளில் பொருத்தப்படும் கேமரா, நமது உடலின் அசைவுகளை தனக்கான உத்தரவு புள்ளிகளாக கிரகித்து அதற்கேற்றபடி செயல்படுவதால், இனி ரிமோட் கன்ட்ரோலுக்கு வேலையே இருக்காது என இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த லேன்காஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் ஹன்ஸ் ஜெல்லர்சன் தெரிவிக்கிறார்.