உலகம்

இத்தாலியில் கொரோனா எதிரொலி : தடையை மீறுவோருக்கு 3 மாதம் சிறை

இத்தாலியில் கொரோனா எதிரொலி : தடையை மீறுவோருக்கு 3 மாதம் சிறை

webteam

கொரோனா அச்சத்தால், இத்தாலியில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவுக்கு அடுத்தப்படியாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தடையை மீறுவோருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. இதன் காரணமாக இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள 14 மாகாணங்களில், போக்குவரத்து முடக்கம் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் ஒன்றரை கோடி பேர் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அத்துமீறி வெளியேறினால் 3 மாதம் சிறை அல்லது 233 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்படும் என இத்தாலி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து ரயில்நிலையங்களிலும் பயணிகளின் உடல்வெப்பநிலையை சோதிக்கும் Thermal Screening முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் செல்லும் கார்களில் பயணிப்போரும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கொரோனா வைரஸால் இத்தாலியில் மட்டும் 7,375 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 366 பேர் உயிரிழந்துள்ளனர்.