அமைதி என்பது தமக்குப் பிடிக்காத வார்த்தை என்று ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் அமைதி குறித்தான தனது கருத்தை இன்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் “அமைதி! அந்த வார்த்தையை வெறுக்கிறேன். அமைதியைப் பற்றி அக்கறை கொண்டவர்கள் நான் பேசுவதை கேட்கத் தேவையில்லை. அமைதியைப் பற்றி கவலைப்படாதவர்கள் என்றால் பரவாயில்லை” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பெர்கெய்னில் உள்ள சுவரில் அமைதி என்று எழுதப்பட்டு இருந்ததால் தாம் அங்கு நுழைய மறுத்துவிட்டதாகவும் எலான் மஸ்க் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரஷ்யா - உக்ரைன் போரிலும் தீவிரமாக தனது கருத்துகளை புதினுக்கு எதிராக தெரிவித்து வருகிறார் எலான் மஸ்க். ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதினுக்கு ஒற்றைப் போருக்கான சவாலை விடுக்கிறேன் என்று பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைன் நாட்டின் தொலைத்தொடர்பு இணைப்பு முழுவதும் சீர்குலைந்ததையடுத்து, டெஸ்லாவின் ஸ்டார்லிங்க் இணைய முனையங்கள் போர் பாதித்த பகுதிக்கு அனுப்பப்பட்டு இணையதள வசதிகளை வழங்கியிருந்தார் எலான் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.