உலகம்

எலான் மஸ்க்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 90 மில்லியனாக உயர்வு!ஆனால் அதில் பாதி போலி கணக்குகள்

எலான் மஸ்க்கை பின்தொடர்வோர் எண்ணிக்கை 90 மில்லியனாக உயர்வு!ஆனால் அதில் பாதி போலி கணக்குகள்

ச. முத்துகிருஷ்ணன்

ட்விட்டரை வாங்கியபின் எலான் மஸ்கை பின் தொடர்வோர் எண்ணிக்கை 90 மில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால் அதில் பாதி போலிக் கணக்குகள் என தெரியவந்துள்ளது.

பிரபல சமூக வலைதளமான “ட்விட்டர்” தளத்தை 44 மில்லியன் அமெரிக்க டாலருக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வாங்கினார். இதையடுத்து டிவிட்டரில் சுமார் 6 மில்லியன் கூடுதல் பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. டிவிட்டரை வாங்கும் முன்னதாக, அவரைப் பின்தொடர்பவர்கள் சுமார் 84 மில்லியனாக இருந்தனர், இப்போது அவர்கள் கிட்டத்தட்ட 90 மில்லியனைத் தொட்டுள்ளனர். இருப்பினும், அவரைப் பின்தொடர்பவர்களில் பாதி பேர் போலியானவர்கள் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

டைம் அறிக்கையின்படி, டிவிட்டர் தணிக்கைக் கருவியான “ஸ்பார்க்டோரோ”, எலான் மஸ்க்கைப் பின்தொடர்பவர்களில் 48 சதவீதம் பேர் போலியானவர்கள் என்று தெரிவிக்கிறது. அவரை பின் தொடரும் பல கணக்குகள் ஸ்பேம் பாட்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிவிட்டரை வாங்கியபின் எலான் மஸ்க் தீர்க்க விரும்பிய சிக்கல்களில் இதுவும் ஒன்று. ஸ்பேம் போட்கள் டிவிட்டரில் மிகவும் எரிச்சலூட்டும் பிரச்சனை என்று முன்னர் ஒருமுறை எலான் மஸ்க் கூறினார்.

"புதிய அம்சங்களுடன் தயாரிப்பை மேம்படுத்துவதன் மூலமும், நம்பிக்கையை அதிகரிக்க வழிமுறைகளை உருவாக்குவதம் மூலமும், ஸ்பேம் போட்களைத் தோற்கடிப்பதன் மூலமும், அனைத்து மனிதர்களையும் அங்கீகரிப்பதன் மூலமும் டிவிட்டரை முன்னெப்போதையும் விட சிறப்பாக உருவாக்க விரும்புகிறேன்" என்று அவர் தனது ட்வீட் ஒன்றில் குறிப்பிட்டார்.