டெஸ்லா கார் புதியதலைமுறை
உலகம்

‘இனி டிரைவர் தேவையில்லை...’ - ஓட்டுநரே இல்லாமல் பத்திரமாக அழைத்துச் செல்லும் டெஸ்லா ரோபோ கார்!

இந்த தானியங்கி காரின் மாதிரியை சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் அறிமுகம் செய்து வைத்தார்.

PT WEB

டெஸ்லாவின் ரோபோ டாக்ஸி குறித்த புதிய அப்டேட்டை எலன் மாஸ்க் கொடுத்துள்ளார். அப்படி என்ன அந்த ரோபோ டாக்ஸியில் உள்ளது... வாங்க பார்க்கலாம்...

‘என்ன கார்-டா இது...’ என அனைவரையும் புருவம் உயர்ந்த வைக்கிறது டெஸ்லாவின் ரோபோ கார். காரை பார்த்தவுடன் ஒரே ஒரு ரைடாவது போயாக வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வரும். காரணம் ஓட்டுநர் தேவையில்லை, பதற்றம் இல்லை, ஏறி உட்கார்த்தால் போதும் நாம் சொல்லும் இடத்துக்கு விரைந்து செல்லுமாம் இந்த ரோபோ டாக்ஸி.

ரோபோ டாக்ஸி

இந்த தானியங்கி காரின் மாதிரியை சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் அறிமுகம் செய்து வைத்தார். டெஸ்லா உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமாகவே அறியப்பட்டாலும், மஸ்கிற்கு அதனை ஒரு ரோபோடிக் நிறுவனமாகவே உருவாக்க ஆசை.

அதனால்தான் செயற்கை நுண்ணறிவு, தானியங்கி தொழில்நுட்பங்களை தாங்கள் உருவாக்கும் எலக்ட்ரிக் கார்களில் முதன்மை அம்சமாக செயல்படுத்தி வருகிறது டெஸ்லா.

தானியங்கி முறையில் செயல்படக்கூடிய, 20 பேர் வரை அமர்ந்து பயணம் செய்யும் வகையிலான ரோபோவேன் குறித்த அறிவிப்பையும் மஸ்க் அறிமுகம் செய்து கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது விற்பனையில் இருக்கும் டெஸ்லா கார்களிலேயே பகுதியளவு தானியங்கி தொழில்நுட்பம் உள்ள நிலையில் அவற்றின் மீதே பல புகார்கள் உள்ளன. அவை விபத்தை ஏற்படுத்தியதாக புகார்கள் வெளியான நிலையில் அமெரிக்க அரசு விசாரித்து வருகிறது.

ரோபோ கார்

இந்நிலையில் முழுமையும் தானியங்கி முறையில் இயங்கும் டெஸ்லா ரோபோ டாக்சிகள் எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இவை எந்த பிரச்னையுமின்றி இருக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் இவ்வகை கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.