உலகம்

எந்த நாடுகளில் அதிக ஜனநாயகம்? பட்டியலில் முன்னேற்றம் கண்ட இந்தியா

எந்த நாடுகளில் அதிக ஜனநாயகம்? பட்டியலில் முன்னேற்றம் கண்ட இந்தியா

EllusamyKarthik

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய புலனாய்வு பிரிவு (EIU) ஆண்டுதோறும் 167 நாடுகள் அடங்கிய ஜனநாயக குறியீடு பட்டியலை சர்வே மேற்கொண்டதன் அடிப்படையில் வெளியிடும். அந்த வகையில் கடந்த 2021-க்கான ஜனநாயக குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா 46-வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2014-இல் இந்தியா இந்தப் பட்டியலில் 27-வது இடத்தை பிடித்திருந்தது. கடந்த 2020-இல் இந்தியா இந்த பட்டியலில் 53-வது இடத்தை பிடித்திருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றதன் பலனாக மொத்தமாக 6.91 புள்ளிகளை பெற்று 7 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது. இருந்தாலும் ஜனநாயகம் குன்றி வரும் (Flawed Democracy) நாடுகளின் பிரிவில் இந்தியாவை வகைப்படுத்தியுள்ளது EIU. பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 104-வது இடத்தை பிடித்துள்ளது. 

உலகின் டாப் 10 ஜனநாயக நாடுகள்!

நார்வே,

நியூசிலாந்து,

பின்லாந்து,

சுவீடன்,

ஐஸ்லாந்து,

டென்மார்க்,

அயர்லாந்து,

தைவான்,

ஆஸ்திரேலியா,

சுவிட்சர்லாந்து.