உலகம்

130 வது பிறந்த தினம் கொண்டாடும் ஈபிள் டவர்

130 வது பிறந்த தினம் கொண்டாடும் ஈபிள் டவர்

webteam

பிரான்ஸ் நாட்டின் அடையாளமாக விளங்கும் உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவர் இன்று 130 வது ஆண்டு பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள ’ஈபிள் டவர்’ உலக சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 1889 ஆம் ஆண்டு இதே நாளில் தான் ஈபிள் டவர் திறந்து வைக்கப்பட்டது.

1887 ஆம் ஆண்டு ஈபிள் டவரை வடிவமைக்க தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் சுமார் 2 ஆண்டுகள் 2 மாதங்கள் மற்றும் 5 நாட்களுக்கு பிறகு தான் முடிவு பெற்றதாக கூறப்படுகிறது. சுமார் 10 ஆயிரம் டன் எடைக்கொண்ட ஈபிள் டவர், 324 மீட்டர் உயரம் கொண்டது. ஈபிள் டவர் தொடங் கப்பட்டதிலிருந்து தொடர்ந்து 41 வருடங்களாக உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் அல்லது கோபுரம் என்ற பெருமையை பெற்றது.