உலகம்

எகிப்தில் உள்ளூர் பயங்கரவாதிகளால் காத்திருக்கும் ஆபத்து

எகிப்தில் உள்ளூர் பயங்கரவாதிகளால் காத்திருக்கும் ஆபத்து

webteam

எகிப்தில் மசூதிக்குள் புகுந்து ‌தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அனைவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள ரவாத் மசூதிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று புகுந்து பயங்கரவாதிகள் திடீரென குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் 305 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறப்பேற்கவில்லை.

எனினும் ஐஎஸ் அமைப்பின் சினாய் மாகாண கிளையான விளாயத் சினாய் பயங்கரவாத குழுவுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இக்குழுவைச் சேர்ந்த அனைவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும் சினாய் தீபகற்பத்தின் முழு பகுதியையும் அறிந்த வைத்துள்ளவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் எகிப்தில் பயங்கரவாதிகளால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து நேரலாம் என்று கூறப்படுகிறது.