உலகம்

துருக்கியில் நிலநடுக்கம், சுனாமி : கட்டட இடிபாடுகளில் சிக்கிய மக்கள்

துருக்கியில் நிலநடுக்கம், சுனாமி : கட்டட இடிபாடுகளில் சிக்கிய மக்கள்

webteam

துருக்கி அருகே ஏஜியன் கடல் பகுதியில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் இருபதுக்கும் அதிகமான கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. கிரீஸ் நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டங்கள் சேதம் அடைந்ததுள்ளதாகவும், இடிபாடுகளுக்கு இடையில் மக்கள் சிக்கியுள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் பதற்றமடைந்த மக்கள் வீடுகளுக்கு வெளியே  அலறியபடி தெருக்களுக்கு ஓடிவந்தனர்.  நிலநடுக்கம் காரணமாக கடல்பகுதியில்  சுனாமி ஏற்பட்டு தெருக்களில் கடல்நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மத்திய இஷ்மீர் பகுதியில் பலமாடிக்கட்டடம் இடிந்து விழுந்தது. நகரத்தின் பல பகுதிகளில் புகைமண்டலம் எழுந்தது. கடல் நீர் தெருவுக்குள் பாயும் காணொலிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இஷ்மீர் மாகாணத்தில் கட்டட சிதிலங்களில் ஆறு பேர் சிக்கியிருக்கலாம் என துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோயுலு தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை உயிரிழப்பு பற்றிய தகவல் வெளிவரவில்லை.