உலகம்

கொரோனா லாக்டவுனில் சொத்து மதிப்பை பலமடங்கு கூட்டிய அமெரிக்க பணக்காரர்கள்

கொரோனா லாக்டவுனில் சொத்து மதிப்பை பலமடங்கு கூட்டிய அமெரிக்க பணக்காரர்கள்

EllusamyKarthik

கொரோனா பொதுமுடக்க காலத்தில் 360 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலாக சம்பாதித்து, அதன் மூலம் தங்களது சொத்து மதிப்பை கூட்டியுள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரர்கள். இதனை அமெரிக்க நாளேடான வாஷிங்டன் போஸ்ட் செய்தியாக வெளியிட்டுள்ளது. 

இதில் டாப் லிஸ்டில் இருப்பது அமேசான் நிறுவனர் பெசாஸ் மற்றும் டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்கும் தங்களது சொத்து மதிப்பில் அதிகம் சம்பாதித்துள்ளனர். அவர்களை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 100 பில்லியன் அமெரிக்க டாலரும், கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவானார்களான லேரி பேஜ் மற்றும் செர்ஜி பெரின் 65 பில்லியன் அமெரிக்க டாலர்களும் ஈட்டியுள்ளனர். 

அமேசான் அதிகம் சம்பாதிக்க பொதுமுடக்க சமயத்தில் ஆன்லைன் வர்த்தகம் அதிகரித்தது காரணமாக சொல்லப்படுகிறது. இது தவிர யாஹூ பினான்ஸ் நிறுவனம், ஆரேக்கேல் லேரி எல்லிசான், டெல் தொழில்நுட்பத்தில் தலைமை செயல் அதிகாரி மைக்கேல் டெல் ஆகியோரது சொத்து மதிப்புகளும் உயர்ந்துள்ளன. 

உலகமே பொருளாதார ரீதியான சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில் தான் இந்த செல்வந்தர்கள் தங்களது சொத்து மதிப்பை கூட்டியுள்ளனர்.