ஷைக்கா மஹ்ரா insta
உலகம்

திருமணமாகி 1 வருடம் ஆன நிலையில், கணவரை விவாகரத்து செய்தார் துபாய் இளவரசி.. இன்ஸ்டாவில் பதிவு!

துபாயின் ஆட்சியாளரின் மகளான ஷைக்கா மஹ்ரா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார்.

Prakash J

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம். இவருடைய குழந்தைகளில் ஷேக்கா மஹ்ரா ஒருவர். இவர், ’துபாய் இளவரசி’ என அழைக்கப்படுகிறார். இவருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்தது. இதை, கணவன் - மனைவி இருவரும் கொண்டாடியதுடன், இன்ஸ்டா மூலம் ஷேக்கா மஹ்ரா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஷேக்கா மஹ்ரா தனது கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாவில் பகீரங்கமாக அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”காதல் என்றபெயரில் என் மகனை ஏமாற்றியுள்ளார்”-மருமகள் மீது வீரமரணமடைந்த கேப்டனின் தந்தை குற்றச்சாட்டு

இதுகுறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், ”அன்புள்ள கணவர், நீங்கள் மற்றவர்களுடன் உறவில் இருப்பதால், நம் விவாகரத்தை இதன்மூலம் நான் அறிவிக்கிறேன். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன்; நான் உங்களை விவாகரத்து செய்கிறேன்; நான் உங்களை விவாகரத்து செய்கிறேன். பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் முன்னாள் மனைவி" எனப் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருவதுடன், பலரும் இந்தப் பதிவுக்கு தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதில் பலர், “இது மோசமான முடிவு” என்றும், “கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்” என்றும் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் இந்தப் பதிவு போலியாக இருக்கும் என்றும் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், அவர்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் இதுகுறித்து ஆய்வும் செய்துள்ளனர். அதில் மஹ்ரா தன் கணவருடன் இருக்கும் படங்களை நீக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால், இத்தகவல் உண்மையாக இருக்கும் என பயனர்களும் நம்புகின்றனர். இதையடுத்தே மஹ்ராவின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: ’ஜெய் ஸ்ரீராம்' கோஷத்துடன் மகாராஷ்டிராவில் இடிக்கப்பட்ட மசூதி.. வைரலாகும் வீடியோ.. பின்னணியில் யார்?