டொனால்டு ட்ரம்ப் ட்விட்டர்
உலகம்

இஸ்ரேல்-ஈரான் மோதல்| உலகப்போருக்கு வாய்ப்பு.. டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை!

”இஸ்ரேல்-ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது” என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Prakash J

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை, காஸா நகர் மீது தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இஸ்ரேலுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் அமெரிக்காவே போர் நிறுத்தம் வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால், அதைப் பற்றி கவலைபடாமல் தொடர்ந்து இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

israel war

அதேநேரத்தில், போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், இதுவரை சுமுக முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், இஸ்ரேல் மீது அண்டை நாடான ஈரான் போர் தொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக கெடு விதித்திருப்பதாகவும் அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால், ’இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேல் செல்வதை தவிர்க்க வேண்டும்’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க: கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்!

இந்த நிலையில், ”இஸ்ரேல்-ஈரான் மோதல் விவகாரத்தால் உலகப்போர் ஏற்படும் அபாயம் உள்ளது” என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Trump

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக கட்டடத்தின் மீது இஸ்ரேல் சமீபத்தில் (ஏப்ரல் 1) தாக்குதல் நடத்தியதாகவும் அதில் முக்கிய அதிகாரிகள் என 13 பேர் கொல்லப்பட்டதாகவும் ஈரான் ராணுவம் தெரிவித்திருந்தது. அதற்குப் பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக அப்பகுதியில் போர்ப் பதற்றம் நிலவுவதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன.

இதையும் படிக்க: மனைவியைப் பழிவாங்க 1 வயது குழந்தைக்கு பாதரச ஊசியைச் செலுத்திய தந்தை.. ஜெர்மனியில் அரங்கேறிய கொடூரம்!