உலகம்

"காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தை தணிக்க வேண்டும்" - ட்ரம்ப்

webteam

காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என இந்தியா மற்றும் பாகிஸ்தானை அமெரிக்க அதிபர் ட்ரப்ம் கேட்டுக்கொண்டுள்ளார்

காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட பின்னர் முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் சுமார் 30 நிமிடங்கள் உரையாடினார். இந்த உரையாடலின்போது இருநாட்டு உறவு மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 

காஷ்மீர் விவகாரம் குறித்து டிரம்ப் ‌உடன் நரேந்திர மோடி விரிவாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போது இந்தியாவுக்கு எதிராக சில தலைவர்கள் வன்முறையை தூண்டிவிடும் வகையில் பேசிவருவதாக குற்றம்சாட்டிய மோடி, இது பிராந்திய அமைதிக்கு உகந்ததல்ல என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள அமெரிக்க  அதிபர் ட்ரம்ப், ''எனது நண்பர்களான இந்திய பிரதமர் மோடியிடமும், பாக்.,பிரதமர் இம்ரான் கானிடமும் உரையாற்றினேன். வர்த்தகம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து பேசினேன். முக்கியமாக, காஷ்மீர் விவகாரத்தில் பதட்டத்தை தணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். இது கடினமான சூழல் என்றாலும் பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது'' என தெரிவித்துள்ளார்