டெனால்ட் ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் முகநூல்
உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்| ”கமலா ஹாரிசுக்கு இந்துக்கள் மீது அக்கறை இல்லை”- டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம்!

அமெரிக்க அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு இந்துக்கள் மீது அக்கறை இல்லை என குடியரசுக் கட்சி வேட்பாளர் டெனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

PT WEB

அமெரிக்க அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு இந்துக்கள் மீது அக்கறை இல்லை என குடியரசுக் கட்சி வேட்பாளர் டெனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்கா வாழ் இந்து மக்களுக்கு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்தார். தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை கண்டிக்கிறேன். நான் அமெரிக்காவின் அதிபராக இருந்திருந்தால் இதனை நடந்திருக்க விடமாடேன். அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களை ஜோ பைடனும், கமலா ஹாரிசும் புறக்கணித்துள்ளார்கள்.

அமெரிக்கா வாழ் இந்துக்களின் விடுதலைக்காக போராடுவேன். எனது நிர்வாகத்தின் கீழ் இந்தியாவுடனான உறவை நண்பர் பிரதமர் மோடியுடன் இணைந்து வலுப்படுத்துவேன். அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குவோம். இதன் மூலம் அமைதியை திரும்ப கொண்டு வருவோம்.” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.