டொனால்டு டிரம்ப் புதிய தலைமுறை
உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்பை பின்னுக்கு தள்ள முடியவில்லை.. கருத்துக்கணிப்பில் தகவல்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பை பின்னுக்கு தள்ள முடியவில்லை என கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

Prakash J

அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக, குடியரசு கட்சி வேட்பாளர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பாளரை தேர்வு செய்யும் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட உள்ள நிலையில், அவரது கட்சி சார்பில், இந்திய வம்சாவளிகளான நிக்கி ஹாலே, விவேக் ராமசுவாமி ஆகியோரும் களமிறங்கி உள்ளனர். இந்நிலையில், குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கான இரண்டாவது விவாதம் தற்போது நடைபெற்றது.

டொனால்டு ட்ரம்ப்

முதல் விவாதத்தில் டொனால்டு டிரம்ப் பங்கேற்காததைப்போல், இந்த விவாதத்திலும் அவர் பங்கேற்கவில்லை. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விவாதத்தில், நிக்கி ஹாலே வலுவான வாதங்களை முன்வைத்து பேசினார். எனினும், இதில் பங்கேற்ற ஏழு பேரும் தங்கள் வாதத்தின்மூலம் டொனால்டு டிரம்பை பின்னுக்கு தள்ள முடியவில்லை என கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.