ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, அரிசோனா, விஸ்கான்சின், பென்சில்வேனியா உள்ளிட்ட பிரதான மாகாணங்களில், அதிபர் ஜோ பைடனை, டொனால்ட் டிரம்ப் பின்னுக்குத் தள்ளி உள்ளது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. 2020 தேர்தலில் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோபைடன் வெற்றியை தன்வசமாக்கிய ஜார்ஜியா மாகாணத்தில், டொனால்ட் டிரம்ப் ஐந்து சதவீத அதிக வாக்குகள் பெறக்கூடும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கடந்த தேர்தலில் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பைடன் கைப்பற்றிய மிச்சிகன் மாகாணத்தில், டொனால்ட் டிரம்ப் 10 சதவீத வாக்குகள் அதிகமாக பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெவாடா, அரிசோனா, விஸ்கான்சின், பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களிலும், பைடனை டிரம்ப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெறக்கூடும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
அதிபர் ஜோ பைடனின் கொள்கைகள், பொருளாதார நிலைமையை மோசமாக்கி இருப்பதும், அதன் தாக்கம் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளில் எதிரொலித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.