அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் நேற்று (நவம்பர் 5) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் அப்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டனர். இதில் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபரானார்.
இந்தவகையில், 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகின்றனர்.
மொத்தமுள்ள 538 தேர்வாளர் குழு வாக்குகளில் யார் 270 அல்லது அதற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்படுவார்.
உலகமே எதிர்பார்த்து காத்திருந்த 47 ஆவது அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. அசோசியேட் பிரஸ் உள்ளிட்ட முன்னணி அமெரிக்க செய்தி நிறுவனங்கள் முடிவுகளை அறிவிக்க தொடங்கி உள்ளன.
அதன்படி குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்தவகையில், அமெரிக்கா அதிபர் தேர்தலில் முதற்கட்ட முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதில், மொத்தமுள்ள 538 இடங்களில் குடியரசு கட்சியின் சார்பில் களத்தில் உள்ள டொனால்ட் ட்ரம்ப் 137 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறார். ஜனநாயக கட்சி சார்பில் களத்தில் உள்ள கமலா ஹாரிஸ் 99 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறார்.
இதன்படி, கெண்டகி, இண்டியானா, வெர்மாண்ட் உள்ளிட்ட 10 மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ள ட்ரம்ப் 53.5% வாக்குகளுடன் முன்னிலையும், , ஜனநாயக கட்சி சார்பில் களத்தில் உள்ள கமலா ஹாரிஸ் வெர்மாண்ட் மாநிலத்தை கைப்பற்றி 45.4% வாக்குகளுடனும் பின்னடைவையும் சந்தித்து இருக்கிறார்.
ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றால், அதிக வயதில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்,132 ஆண்டுகளுக்குப்பின் முந்தைய தேர்தலில் தோற்ற அதிபர் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார், குற்ற வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் அதிபரானார் என்றெல்லாம் வரலாற்றையும் படைப்பவராவார்.
அதேபோல கமலா ஹாரிஸ் வெற்றிப்பெற்றால் நாட்டின் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையையும், முதல் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் என்ற பெருமையையும் பெறுவார்.
இருவரில் யார் எந்த வரலாற்றை படைக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.