டொனால்டு ட்ரம்ப் எக்ஸ் தளம்
உலகம்

”இதுவே கடைசி” - தோல்வியுற்றால் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ட்ரம்ப் பதில்!

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Prakash J

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களத்தில் உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரான கமலா ஹாரிஸ் உள்ளார். ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் நேரடி விவாதத்துக்குப் பின்னர் இரு தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கமலா ஹாரிஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பல்வேறு கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன.

ட்ரம்ப்

இந்த நிலையில் ட்ரம்ப்விடம், ”நீங்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா” என கேட்ட கேள்விக்கு, 2024-இல் வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் முயற்சியில் தோல்வி அடைந்தால் 2028-இல் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”வடஇந்தியர்கள் வெளியேறினால்..“ பெங்களூரு குறித்து சர்ச்சை கருத்து; எதிர்ப்பால் பல்டி அடித்த பிரபலம்!

ஏற்கனவே கடந்த 2016 அதிபர் தேர்தலில் வென்ற ட்ரம்ப், 2020 அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால், அந்த தேர்தலில் அவர் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா தேர்தல் விதிகளின்படி ஒருவர் 2 முறைக்கு மேல் அதிபராக முடியாது என்றபோதிலும், அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம். அதற்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. அதன்படி ட்ரம்ப் நடப்புத் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.

ஆனால், அதை ட்ரம்ப் விரும்பவில்லை என்பது தற்போது உணர்த்தியுள்ளார். இதற்கிடையே, சமீபகாலமாக எடுக்கப்பட்டு வரும் கருத்துக்கணிப்பு முடிவுகளும் ட்ரம்புக்கு ஆதரவாக இல்லை. ஜோ பைடன் அதிபர் ரேஸில் இருந்தவரை ட்ரம்ப்பின் கைதான் ஓங்கி இருந்தது. ஆனால், பைடன் விலகி கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, ட்ரம்ப் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். என்றாலும் கருத்துக்கணிப்புகள் அதிபரைத் தேர்வு செய்வதில்லை.

இதையும் படிக்க: பணிச்சுமையால் உயிரிழந்த இளம்பெண்.. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிர்மலா சீதாராமன்.. குவிந்த கண்டனம்!