உலகம்

கிம் ஜாங் உன் உடன் சந்திப்பு உறுதி: ட்ரம்ப் அறிவிப்பு

கிம் ஜாங் உன் உடன் சந்திப்பு உறுதி: ட்ரம்ப் அறிவிப்பு

webteam

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு வரும் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் வட கொரிய அதிபரின் சிறப்பு பிரதிநிதி கிம் யாங் சோல் உடனான சந்திப்பிற்குப் பின் ட்ரம்ப், கிம் உடனான சந்திப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது வட கொரியாவின் அணு ஆயுதத் தயாரிப்பு திட்டங்களை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பை உருவாக்குமா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். 
ஆனால் இருதரப்பு இடையேயான உறவு மேம்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அணு ஆயுதத் தயாரிப்பு திட்டங்களை வட கொரியா கைவிடும் பட்சத்தில் அந்நாட்டின் வளர்ச்சிக்கு உதவ அமெரிக்கா உறுதி அளித்திருந்தது. இருப்பினும் இது தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னரே தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.