அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் சேர அனுமதி கிடையாது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜெனரல்கள் மற்றும் ராணுவ நிபுணர்களுடான ஆலோசனையின் படி அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணி புரிய அமெரிக்க அரசு அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க ராணுவம் மிகப்பெரிய வெற்றிகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள டிரம்ப், திருநங்கைகளால் ராணுவத்தில் ஏற்படும் அதிக அளவிலான மருத்துவ செலவுகள் மற்றும் பிளவுகள் இனி இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ராணுவத்தில் உள்ள ஏராளமான திருநங்கைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.