டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ் எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்கா|தேர்தல் தோல்வியால் 170கோடி கடன்; ஜனநாயக கட்சியினருக்கு உதவி செய்யுங்கள் என ட்ரம்ப் கிண்டல்

கமலா ஹாரிஸின் பிரசார முடிவில் ஜனநாயக கட்சிக்கு 20 மில்லியன் டாலர் (ரூ.170 கோடி) கடன் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன

Prakash J

அமெரிக்காவில் 47வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். வெள்ளை மாளிகையில் அதற்கான பண்கள் வேகம்பிடித்து வருகின்றன. உலகம் முழுவதும் அவரைச் சுற்றிப் பல்வேறு சவால்கள் காத்திருக்கும் வேளையில், தம்முடைய ஆட்சியில் யார் யாருக்குப் பங்கு கொடுப்பார் என்கிற தகவல்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கமலா ஹாரிஸின் பிரசார முடிவில் ஜனநாயக கட்சிக்கு 20 மில்லியன் டாலர் (ரூ.170 கோடி) கடன் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து, கமலா ஹாரிஸுக்காக டொனால்டு ட்ரம்பே நிதி கேட்டுள்ளார்.

ட்ரம்ப், கமலா ஹாரிஸ்

இதுகுறித்த அவருடைய சமூக வலைதளப் பதிவில், ”கமலா ஹாரிஸின் பிரசார முடிவில் ஜனநாயக கட்சிக்கு 20 மில்லியன் டாலர் (ரூ.170 கோடி) கடன் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களின் வங்கிக் கணக்கில் இப்போது நிறைய பணம் இல்லை. இதனால், பல நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் அவர்களுக்கு நாம் உதவ வேண்டும். ஒரு கட்சி என்ற முறையில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். எனவே குடியரசு கட்சி ஆதரவாளர்கள் ஜனநாயக கட்சிக்கு நிதி உதவி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்’’ என கூறி உள்ளார்.

இதையும் படிக்க: வங்கதேசம்| ட்ரம்ப் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய யூனுஸ் அரசாங்கம்! பின்னணி என்ன?

கமலா ஹாரிஸின் பிரசாரம், அவரது குழுக்களுடன் இணைந்து, 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்டியது. இதில், தேர்தலுக்காக 1.9 பில்லியன் அமெரிக்க டாலரைச் செலவழித்துள்ளது. அதேநேரத்தில் ட்ரம்பிற்காக வெறும் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் திரட்டப்பட்டுள்ளது. இதில்,1.6 பில்லியன் அமெரிக்க டாலர் செலவழிக்கப்பட்டுள்ளது. 1 பில்லியனுக்கும் அதிகமாக கமலா ஹாரிஸ் நிதி திரட்டிய போதிலும், அக்டோபர் 16ஆம் தேதிவரை அவருடைய பிரசார வங்கிக் கணக்கில் 118 மில்லியன் அமெரிக்க டாலர்களே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே, அவர், 20 மில்லியன் டாலர் அளவுக்கு கடன் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தை நன்கு அறிந்த இரண்டு ஆதாரங்களின்படி, பொலிட்டிகோவின் கலிபோர்னியா பணியகத் தலைவர் கிறிஸ்டோபர் கேடலாகோ மேற்கோள் காட்டியுள்ளார்.

முன்னதாக, அதிபர் தேர்தலில் அமெரிக்காவைச் சேர்ந்த பல பில்லினியர்களும் கமலா ஹாரிஸுக்கே நிதியை அதிக அளவில் அள்ளி வீசினர். குறிப்பாக, தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தல் நிதி பெற்றதில் கமலா ஹாரிஸ் பெரிய புரட்சியே படைத்தார். அதேநேரத்தில், டொனால்டு ட்ரம்புவிற்கு, உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் மட்டும் அதிகளவில் நிதியை அளித்தார். தவிர, வெற்றிபெறுவதற்கான சாத்தியக்கூறுகளை தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடுத்தி வந்தார். என்றாலும், ட்ரம்பின் வெற்றிக்குப் பிறகு பல பில்லினியர்களின் சொத்து அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: அமெரிக்கா | பீச்சில் நடக்க முடியாமல் தடுமாறிய ஜோ பைடன்.. உதவிய மனைவி.. #ViralVideo