உலகம்

ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை: சிரியா மக்கள் அதிரடி

ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை: சிரியா மக்கள் அதிரடி

webteam

சிரிய அரசுப் படைகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையை கண்டு அஞ்சப் போவதில்லை என சிரிய மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிரியாவின் டவுமா நகரில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ரசாயன தாக்குதல் நடத்தியது தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா, சிரியா ஆகிய நாடுகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் சிரியாவில் அமெரிக்க ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என அரசுப் படைக்கும் ரஷ்யாவுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பதிவு மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் இது தொடர்பாக அவர் இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவால் மிரட்டல் மட்டுமே விடுக்க முடியும் என்றும், ரஷ்யா அதற்கு உரிய பதிலடி கொடுக்கும் என்றும் சிரிய மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உயிரை கண்டு அஞ்சாமல் போரிடும் திறமையான வீரர்கள் சிரிய அரசுப் படையில் இருப்பதால் தங்களுக்கு எந்த அச்சமும் இல்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.