உலகம்

32 அடி உயரம், 5 டன் எடை: 7 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் படிமங்கள் கண்டுபிடிப்பு

32 அடி உயரம், 5 டன் எடை: 7 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் படிமங்கள் கண்டுபிடிப்பு

ச. முத்துகிருஷ்ணன்

அர்ஜென்டினாவில் அண்மையில் கிடைத்த டைனோசரின் படிமங்கள், 7 கோடி ஆண்டுகள் பழமையானது என ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்நாட்டில் சான்டா குரூஸ் மாகாணத்தில் 2020 ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் டைனோசரின் சில படிமங்கள் கிடைத்தன.

அவற்றை ஆய்வு செய்தபோது, 32 அடி உயரமும் 5 டன் எடையும் கொண்ட 7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய டைனோசராக அவை இருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. இந்த டைனோசரை “மெகாராப்டர்கள்” என்று அழைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இவை சுறுசுறுப்பான எலும்புக்கூடு மற்றும் சமநிலைக்கு அனுமதிக்கும் நீண்ட வால், நீண்ட கழுத்து மற்றும் 60 க்கும் மேற்பட்ட சிறிய பற்கள் கொண்ட நீளமான மண்டை ஓடு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தொன்மையான படிமங்கள் பியோனஸ் ஏர்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.