உலகம்

விமான விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் அடையாளம் தெரிந்தது!

விமான விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் அடையாளம் தெரிந்தது!

webteam

எத்தியோப்பிய விமான விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் யார் என்று அடையாளம் தெரிந்துள்ளது.

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 149 பயணிகள், 8 ஊழியர்களுடன் கென்யா தலைநகர் நைரோபிக்கு நேற்று புறப்பட்டது.

50 கி.மீ தொலைவில் உள்ள பிஷோப்டு பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 157 பேரும் பலியானார்கள். 

(ஷிகா கார்க்)

இதில் கென்யாவைச் சேர்ந்த 32 பேர், எத்தியோப்பியாவைச் சேர்ந்த 9 பேர், கனடாவைச் சேர்ந்த 18 பேர், சீனா, இத்தாலி, அமெரிக்காவைச் சேர்ந்த தலா 8 பேர், பிரான்ஸ், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேர், எகிப்து நாட்டைச் சேர்ந்த 6 பேர், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 5 பேர், இந்தியா, ஸ்லோவோகியா நாடுகளைச் சேர்ந்த தலா 4 பேர்  உயிரிழந்தனர்.

(மனிஷா)

இந்த விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் யார் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள், வைத்யா பனகேஷ் பாஸ்கர், வைத்யா ஹன்சின் அனகேஷ், நுகவரப்பு மனிஷா மற்றும் ஷிகா கார்க். இதில், ஷிகா கார்க், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக ஆலோசகர். நைரோபியில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் வருடாந்திரக் கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்தார். 

நுகவராப்பு மனிஷா, ஆந்திரா மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர். மனிஷாவின் உறவினர் அவினாஷ், மனிஷா பற்றி தகவல் அறிய அவரது பெற்றோர் காத்திருப்பதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு ட்விட் செய்துள்ளார். மற்ற இரண்டு பேர் பற்றிய தகவல் உடனடியாக கிடைக்கவில்லை. விசாரணை நடந்து வருகிறது.