உலகம்

மலேசியாவில் ஆகஸ்டு 1 வரை அவசரநிலை பிரகடனம் - கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை

மலேசியாவில் ஆகஸ்டு 1 வரை அவசரநிலை பிரகடனம் - கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை

Veeramani

உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மலேசியாவில் ஆகஸ்டு 1 ஆம் தேதி வரை அவசரநிலை பிரகடனம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, மலேசிய மன்னர் அப்துல்லா ஹாஜி அகமத் ஷா அந்நாட்டில் ஆகஸ்டு 1 ஆம் தேதி வரை அவசர நிலை பிரகடனத்தை அறிவித்திருக்கிறார்.

அவசர நிலை பிரகடனத்தால் அரசின் நடவடிக்கைகள், பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்புகள் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கால கட்டத்தில் பொதுத்தேர்தல், இடைத்தேர்தல்கள் நடத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.