ஜான்வி கந்துல்லா  fie image
உலகம்

அமெரிக்காவில் மரணமடைந்த இந்திய மாணவி: பட்டம் வழங்க பல்கலைக்கழகம் முடிவு!

அமெரிக்காவில் இறந்த இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு பட்டம் வழங்க, பல்கலைக்கழகம் முன்வந்துள்ளது.

Prakash J

கடந்த ஜனவரி 23ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த ஜான்வி கந்துல்லா என்ற 23 வயது இந்திய வம்சாவளி மாணவி, அமெரிக்காவின் சியாட்டிலில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது காவல் அதிகாரியான கெவின் டேவ் என்பவர் ஓட்டிச்சென்ற கார் பயங்கரமாக மாணவியின் மீது மோதியது. இதில் 100 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ஜான்வி கந்துல்லா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் விபத்து குறித்தும் ஜான்வி மரணம் குறித்தும் அதிகாரிகள் டேனியல், மைக்சோலன் கேலி செய்து பேசிய தொலைபேசி உரையாடல் டேனியலின் பாடி கேமராவிலேயே பதிவாகி உள்ளது.

’இறந்த பெண் ஒரு சாதாரணமானவர்தான். பெரும் மதிப்புமிக்கவர் அல்ல. அவருக்கு 11,000 டாலர் காசோலையே போதும்’ என விசாரணை அதிகாரி டேனியல் பேசுவது கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து விசாரணை அதிகாரிகள் டேனியல், மைக்சோலன் மீது துறைரீதியில் நடவடிக்கை எடுக்க சியாட்டில் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

ஜான்வி கந்துல்லா

இந்த நிலையில், நார்த்ஈஸ்ட் பல்கலைக்கழகம், ஜான்வி கந்துல்லாவுக்கு பட்டமளிக்க முன்வந்துள்ளது. இதுகுறித்து அப்பல்கலைக்கழக வேந்தர், ‘கந்துல்லா மறைவை அடுத்து, அவருக்கு பட்டமளிக்கத் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதனை, அவருடைய குடும்பத்திற்கு வழங்க இருக்கிறோம். நடந்துவரும் விசாரணையானது, நீதியையும் மற்றும் இந்த சம்பவம் நடந்ததற்கான பொறுப்புணர்வையும் கொண்டுவரும்’ எனத் தெரிவித்துள்ளார்.