உலகம்

50 ஆண்டுகளுக்கு பின் மியான்மரில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை!

50 ஆண்டுகளுக்கு பின் மியான்மரில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை!

webteam

மியான்மர் நாட்டில் 50 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ராணுவ ஆட்சிக்கு எதிராக பயங்கரவாத செயல்களை தூண்டி விட்ட புகாரில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தூக்கிடப்பட்ட நால்வரில் ஒருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 4 பேருக்கும் பொது மன்னிப்பு அளிக்க கோரி ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் அதை மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சி ஏற்கவில்லை.

ராணுவ அரசின் இந்த செயலுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக மியான்மர் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகள் விதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.