தெற்கு ஆப்ரிக்க நாடுகளான ஜிம்பாப்வே, மொசாம்பிக் ஆகியவற்றை புயல் தாக்கியதில் 150 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜிம்பாப்வே, மொசாம்பிக், மலாவி ஆகிய நாடுகளை இடாய் என்ற புயல் கடுமையாகத் தாக்கியது. புயல் காற்று மற்றும் கனமழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மரங்கள், தொலைத்தொடர்பு கம்பங்கள் சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் பிய்த்தெறியப்பட்டன. புயலுக்கு இதுவரை 150 பேர் உயிரிழந்ததாகவும், 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மொசாம்பிக் நாட்டின் துறைமுக நகரான பெய்ராவில் இடாய் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள விமான நிலையம் மூடப்பட்டது. இந்த மூன்று நாடுகளின் பல பகுதிகளில் மின்சார, தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.