ஸ்பெயின் நாட்டில் மக்களின் மன இறுக்கத்தை போக்க அழுகை அறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேட்ரிட் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த அழுகை அறைக்கு மக்கள் வருகைதந்து, தாங்கள் யாரிடம் மனம்விட்டு அழவேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களை அலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசலாம் அல்லது உளவியல் நிபுணர்களிடம் தங்கள் மனதில் உள்ளவற்றை கொட்டி தீர்க்கலாம். மனம் விட்டுப்பேச ஆள் இல்லையே என்ற ஏக்கம் மக்களை உளவியல் ரீதியாக பாதிப்பதால் உளவியல் நிபுணர்கள் இணைந்து இந்த அழுகை அறையை அறிமுகம் செய்துள்ளனர். ஸ்பெயினில் 10இல் ஒருவர் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே மக்களின் மன நலனை பாதுகாக்கவே ஸ்பெயின் அரசு தனியாக நிதி ஒதுக்கீடு செய்கிறது.