உலகம்

கொரோனா பாதிப்பு இல்லாத நாடு : நியூஸிலாந்து அறிவிப்பு

webteam

தங்கள் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு விட்டதாகவும், தற்போது ஒருவர் கூட கொரோனா பாதிப்புடன் இல்லையென்றும் நியூஸிலாந்து அறிவித்துள்ளது.

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனா உயிரிழப்புகள் உலக அளவில் 3 லட்சத்தை கடந்துவிட்டன. இந்நிலையில் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டதாக நியூஸிலாந்து அறிவித்துள்ளது.

தங்கள் நாட்டில் கடந்த 17 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்றும், இறுதியாக கொரோனா சிகிச்சையில் இருந்த ஒரு நபரும் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

நியூஸிலாந்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் அங்கு கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்தது. மொத்தம் 1504 பேர் அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதில் 1,482 சிகிச்சை குணம்பெற்று வீடு திரும்பினர். 22 பேர் உயிரிழந்தனர். கடைசியாக சிகிச்சையில் இருந்த நபரும் வீடு திரும்பினார். இதனால் கொரோனா வைரஸ் அற்ற நாடு என நியூஸிலாந்து அறிவித்துள்ளது.