உலகம்

"கொரோனா நம் காலத்தின் மிகப்பெரிய நெருக்கடி" : ஐநா தலைவர்.!

webteam

ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்த இணையவழி மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசிய ஐநா சபை தலைவர் அன்டானியோ குட்டரெஸ், "நம் காலத்தின் மிகப்பெரிய நெருக்கடியாக கொரோனா இருக்கிறது" என்று தெரிவித்தார். உலகம் முழுவதும் 4 கோடியே 20 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பத்து லட்சம் பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

பெர்லின் நகரில் ஆன்லைன் மூலம் நடந்த உலக சுகாதார மாநாட்டில் கொரோனா தொற்றைத் தடுப்பது தொடர்பாக சுகாதாரப் பணிகளில் உலக நாடுகள் பின்பற்றவேண்டிய ஒருங்கிணைப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இம்மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

"கொரோனாவில் இருந்து யாரும் பாதுகாப்பாக இல்லை. நாம் அதிலிருந்து மீளும் வரையில், யாரும் பாதுகாப்பாக இருக்கமுடியாது" என ஜெர்மன் அதிபர் பிராங்க் வால்ட்டர் ஸ்டெய்மியர் தெரிவித்தார்.