உலகம்

“மீடூவில் எழுதுவதை நிறுத்துங்கள்” - நீதிமன்றத்தில் முறையிட்ட தொழிலதிபர்

“மீடூவில் எழுதுவதை நிறுத்துங்கள்” - நீதிமன்றத்தில் முறையிட்ட தொழிலதிபர்

rajakannan

பிரபல ஆங்கில பத்திரிகையான டெலிகிராப் தன்னைப்பற்றி வெளியிட்டு வரும் மீ டூ புகார்களை நிறுத்த உத்தரவிடக் கோரி, பிரிட்டன் நீதிமன்றத்தில் தொழிலதிபர் ஒருவர் முறையிட்டுள்ளார். 

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். இதற்காக சர்வதேச அளவில் தொடங்கப்பட்டது தான் #MeToo என்ற பிரச்சாரம். இந்தியா உட்பட உலக அளவில் #MeToo பிரச்சார இயக்கத்தின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. 

இந்நிலையில், டெலிகிராப் பத்திரிகையானது உயர்நிலையில் உள்ள அதிகாரிகள், தொழிலதிபர் மீதான பாலியல் புகார்களை ஆய்வு செய்து செய்திகளை வெளியிட்டு வந்தது. ‘ஆரோக்கியமான ஜனநாயக சமூகத்தில் ஆரோக்யமான விவாதங்களுக்கு இதுபோன்ற தகவல்களை வெளியிடுவது நல்லதுதான். இருப்பினும் இந்தத் தகவல்கள் தொழிலதிபர்களின் நம்பதன்மையை சிதைத்து அவர்களுக்கு பெரும் இழப்பை தந்துவிடுகிறது’ என்றார் பிரிட்டன் நீதிபதி ஹட்டன் கேவ். 

அதில், தொழிலதிபர் ஒருவர் பற்றியும் தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகி வந்தது. இந்தச் செய்தியால் அதிர்ச்சி அடைந்த அந்தத் தொழிலபதிபர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னைப்பற்றி பாலியல் புகார் செய்திகள் வெளியாவதால்  தொழில் ரீதியாக பெரும் இழப்பு நேரிடுவதாகவும், ஒப்பந்தங்கள் ரத்தாவதாகவும் கூறி செய்தி வெளியாதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். 

வழக்கு விசாரணையின் போது, கடந்த 8 மாதங்களாக ஆய்வு செய்த தொழிலதிபர் மீதான புகார் தொடர்பாக செய்திகள் வெளியிட்டு வருவதாக டெலிகிராப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், பெண்கள், சிறுபான்மையினர் அதிகாரமிக்கவர்களால் ஒடுக்குமுறைக்கு ஆளாவதை தடுக்க மீ டூ இயக்கம் செயல்பட்டு வருவதாகவும் பத்திரிகை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொழிலதிபர் தொடர்பான செய்திகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.