உலகம்

ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை: நவாஸ் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை: நவாஸ் குடும்பத்தினருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

webteam

விசாரணைக் குழுவிடம் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்திருந்தால், ஏழு ஆண்டுகள்‌ வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் வாரிசுகளுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பனாமா ஆவணங்கள் வெளியானது தொடர்பான வழக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்திய கூட்டுக் குழுவின் அறிக்கை கடந்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நவாஸ் ஷெரீபின் சகோதரர், மகன், மகள் உள்ளிட்டோர் வெளிநாடுகள் சொத்துகளைக் குவித்திருப்பதாக இந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஷெரிப், தனக்கு எதிராக முறையான ஆதாரங்கள் இல்லை என்றும் வாதிட்டு வருகிறார். இந்நிலையில் விசாரணைக் குழுவிடம் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்திருந்தால், ஏழு ஆண்டுகள்‌ வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் வாரிசுகளுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதேவேளையில் ஷெரிப் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சியினர், பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.