உலகம்

கோஸ்டா ரிகாவில் ஹைட்ரஜன் பேருந்து

கோஸ்டா ரிகாவில் ஹைட்ரஜன் பேருந்து

webteam

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

மரபுசாரா எரிசக்திக்கு நாட்டை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தப் பேருந்தில் 40 பேர் பயணம் செய்யலாம். சூரியமின் தகடுகள் மற்றும் ஹைட்ரஜன் வாயு ஆகியவை இந்தப் பேருந்துகளில் பயன்படுத்தப்படும். ‌ஒரு கிலோ ஹைட்ரஜனுக்கு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்குச் செல்லும்.  இந்த பேருந்தை வடிவமைக்க 4 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகியுள்ளது. பெட்ரோலால் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக பல்வேறு திட்டங்களை அந்நாட்டு அரசு செயல்படுத்தி வருகிறது.