உலகம்

கொரோனாவுக்குப் பயந்து பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்ட பயணிகள் - வைரல் வீடியோ

கொரோனாவுக்குப் பயந்து பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்ட பயணிகள் - வைரல் வீடியோ

webteam

கொரோனா வைரஸ் பயத்தால் விமானப் பயணிகள் தங்களை முழுவதும் பிளாஸ்டிக் கவரால் சுற்றிக்கொண்டு பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் 50 நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கோவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் இன்று உலகையே மிரட்டும் அரக்கனாக மாறியுள்ளது. சீனா மட்டுமின்றி இந்தியா, அமெரிக்கா, லண்டன், ரஷ்யா, உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த வைரஸ் நோய்க்கு இதுவரை முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,300 ஐ தாண்டியுள்ளது. 75, 400 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பயத்தால் விமானப் பயணிகள் தங்களை முழுவதும் பிளாஸ்டிக் கவரால் சுற்றிக்கொண்டு பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து, பெண் பயணி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை பகிந்துள்ளார். அந்த வீடியோவில், பெண் பயணி ஒருவர் பிங்க் நிற பிளாஸ்டிக் உடையை உடல், கை, கால் முழுவதும் சுற்றிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அதேபோல் ஆண் பயணி ஒருவர் தன்னுடைய உடல் முழுவதும், வெள்ளை நிற பிளாஸ்டிக் கவரை சுற்றிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கு அந்தப் பயணிகளை சமூக வலைத்தள வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.