உலகம்

கொரோனா கொடுமை: பிரான்ஸில் அழுகி துர்நாற்றம் வீசும் சடலங்கள்!

கொரோனா கொடுமை: பிரான்ஸில் அழுகி துர்நாற்றம் வீசும் சடலங்கள்!

webteam

(கோப்பு புகைப்படம்)

பிரான்ஸ் நாட்டில் முதியோர் காப்பகம் ஒன்றில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்கள் அப்புறப்படுத்தப்படாததால் அவை அழுகி துர்நாற்றம் வீசும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பாரிஸில் சுமார் 90 முதியவர்கள் வசித்த மருத்துவ வசதியுடன் கூடிய காப்பகத்தில் 30 பேர் கொரோனாவால் இறந்து விட்டதாக சிலர் தெரிவித்தனர். மேலும் பாரிஸில் உள்ள கல்லறைகளுக்கு வெளியே ஏராளமான உடல்கள் அடக்கத்திற்காக பிளாஸ்டிக் பாய்களில் சுற்றப்பட்டு நாள் கணக்கில் காத்துக் கிடக்கின்றன.

(கோப்பு புகைப்படம்

இதனால் காப்பகத்தில் உள்ள சடலங்களை எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது. காப்பகத்தில் போதிய அளவு மருத்துவ பணியாளர்கள் இல்லாததும் இறப்புகள் அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.

பிரான்சில் 13,200 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ள நிலையில் இதில் மூன்றில் ஒரு பங்கினர் காப்பகங்களில் உள்ள முதியவர்கள் எனக் கூறப்படுகிறது.